tamilnadu

மதுராந்தகம் மற்றும் அம்பத்தூர் முக்கிய செய்திகள்

மதுராந்தகம் ஏரியைத்  தூர்வார  திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணி துவக்கம்

மதுராந்தகம், ஜன. 31- மதுராந்தகம் ஏரியை  தூர் வாரி விவ சாயப் பயன்பாடு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும் என மதுராந்தகம், அதன் சுற்று வட்டார மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இதன் ஒருபகுதியாக மதுராந்தகம் ஏரியை உடனடியாக தூர் வார வேண்டும் ஏரி நீர் செல்லும் கிளி ஆற்றுப் பகுதியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சிஐடியு  முன்  முயற்சியில் கடந்த ஜூலை மாதம் மது ராந்தகம் ஏரி பாதுகாப்புக் குழு அமைக் கப்பட்டு நகரின் முக்கிய அமைப்புகளுடன் இணைந்து நகரப் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளரிடம் வழங்கினர்.  மேலும் கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர்  தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் மாவட்டச் செய லாளர் கே.நேரு மதுராந்தகம் ஏரியை உடனடியாக தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வழங்கினார். இதன் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்  என்.தியாகராஜன் விவசாயிகள் சங்கத்திற்கு கொடுத்துள்ள பதில் மனுவில்  மதுராந்தகம் ஏரியில் உள்ள உபரிநீர் போக்கியில் தானாக விழும் ஷட்டர்கள்  பழுது  நீக்கும் பணிகள் 2011-12ஆம் ஆண்டில் செய்து முடிக்கப்பட்டு நல்ல முறையில் இயங்கி வருகின்றது.  ஷட்டர் அமைக்கும் பணிகள் அரசின் ஒப்பந்த விதிகளின்படி நடைபெற்றது. இப்பணிகளில் முறைகேடு கள் ஏதும் நடைபெறவில்லை. மதுராந்தகம் ஏரியைத் தூர் வாரி ஏரியின்  கொள்ளளவை அதிகப்படுத்த மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது. மதிப்பீடு அரசுக்கு அனுப்பப்பட்டு  நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும்  பணிகள் துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து கே.நேருவிடம் கேட்ட போது, மதுராந்தகம் ஏரி கடந்த 50 ஆண்டு களாக தூர்வாரப்படாததால் பத்தடிக்கும் மேல் வண்டல் மண் படிந்து முழு கொள்ள ளவையும் எட்டாத நிலையில் மழைக்காலங்க ளில் தண்ணீரை தேக்க முடியவில்லை. இத னால் விவசாயிகளும், மதுராந்தகம் சுற்று வட்டார பொதுமக்களும் பாதிக்கப்படு கின்றனர். உடனடியாக அரசு ஏரியைத் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தவுடன், ஏரி யில் படகு சவாரி அமைக்கவும், ஏரிக்கு அரு காமையில் சுற்றுலா பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை,ஜன.31- சென்னையில் புற்றுநோயில் இருந்து விடுதலை என்ற நிகழ்ச்சி அண்மையில் மேற்கு மாம்பலம் ஆக்ஸ்போர்டு மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. கேன்சர் ரிலிப் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டாக்டர் அனிதா ரமேஷ் கலந்து கொண்டு பேசினார். சவீதா மருத்துவக்கல்லூரி உதவியுடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்  ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்துகொண்டனர். மேலும் புற்றுநோய் குறித்து தவறான புரிதல்களை போக்கும் வகையில் மருத்துவர்கள் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு அறக்கட்டளை சார்பில் இலவசமாக புற்றுநோய் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும்  என்று டாக்டர் அனிதா ரமேஷ் கூறினார்.

காலமானார்

சென்னை, ஜன. 31- இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மாநிலச் செய லாளர் அமுதசாகரம் தாயார் தங்கமணி (74) வெள்ளிக்கிழமை  (ஜன 31) காலமானார். பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவில் வைக்கப்பட்டி ருந்த அவரது உடலுக்கு மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன், வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஜி.பாலகிருஷ்ணன், சண்முகம், கங்காதரன், எஸ்.வி.வேணுகோபாலன், இந்தி யன் வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர்கள் ராஜேந்திரன், சேகரன், மோகன்ராஜ் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து  அஞ்சலி செலுத்தினர். சனிக்கிழமை காலை 9 மணிக்கு அவரது உடல் பெரம்பூ ரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

சீனாவிலிருந்து திரும்பிய  11 பேருக்கு தொடர் கண்காணிப்பு

செங்கல்பட்டு, ஜன. 31- காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வந்துள்ள 9 வெளிநாட்டவர் உட்பட 11 பேர்  சீனாவிலிருந்து வந்த காரணத்தினால் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவின்  பல்வேறு மாகாணங்களிலிருந்து மருத்து வப் படிப்பு, பொறியியல் வேலைக்கு வந்த வர்கள்  என காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு  மாவட்டத்தைச் சேர்ந்த 9 வெளிநாட்டவர் உட்பட 11 பேர்   வந்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் அவர்க ளுக்குத் தீவிர மருத்துவ சோதனை செய்யப்பட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இருப்பினும் செங்கல் பட்டு துணை இயக்குநர் செந்தில்குமார், காஞ்சிபுரம் சுகாதார துணை இயக்குநர் பழனி தலைமையில் அந்தந்த பகுதியில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களின் அன்றாட பணி பாதிக்காத வகையில் அவர்களை தீவிரமாக 24 மணி நேர மும் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் கூடும் இடத்திற்குத் தேவையில்லாமல் செல்வதைத் தவிர்க்கவும் அவர்கள் அறையில் முகமூடி அணிந்து கொண்டு இருக்க வேண்டும் என்றும் தொடர்  இருமல் தலைவலி காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவக் குழு வைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும்  மருத்துவக் குழுவால் அறிவுரை வழங் கப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் எளிதில் மற்றவர்களுக்கும் பரவும் என்பதால் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக 28 நாட்களுக்கு கண்காணிப்பில் இருப்பார்  கள் என சுகாதாரத்துறை இயக்குநர்கள் தெரி வித்தனர். இந்த பதினோர் பேருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் அதிகரித்தால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் தெரி வித்துள்ளனர்.

கனரக தொழிற்சாலையில் பாதுகாப்பு வீரர் சுட்டுக் கொலை: சக வீரர் கைது

அம்பத்தூர், ஜன. 31- அம்பத்தூர் அடுத்த ஆவடியில் மத்திய  அரசுக்கு சொந்தமான கனரக தொழிற்சாலை  உள்ளது. இங்கு இந்திய ராணுவத்திற்கு  தேவையான பீரங்கிகள் தயாரிக்கப்படு கின்றன. இங்கு அதிகாரிகள், நிரந்தர மற்றும்  ஒப்பந்த ஊழியர்கள் என சுமார் 7 ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரு கின்றனர். பாதுகாப்பு பணியில் இந்திய ராணு வத்தில் ஓய்வு பெற்ற வீரர்கள் அமர்த்தப் பட்டுள்ளனர். இவர்கள் 2 மணி நேரத்திற்கு ஒரு  முறை ஷிப்ட் முறையில் இரவு, பகலாக பணியாற்றுகின்றனர். ஒரு ஷிப்ட்டில் அதிகாரி கள் பாதுகாவலர்கள் என மொத்தம் 12 பேர்  வேலை செய்கின்றனர். இவர்களுக்கு, பாது காப்பு பணியின்போது, வெளியாட்கள் உள்ளே நுழைவதை தடுக்கவும், தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் 2 மணி வரை திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த நிலம்பார் சிங்கா (49) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். இவர் திடீரென நள்ளிரவு 12.15 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த பாதுகாவலர் அறைக்குள் நுழைந்து, திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக 6 முறை சுட்டுள்ளார். இதில் அங்கு தூங்கிக்  கொண்டிருந்த கிரிஜேஷ்குமாரின் தலை மற்றும் உடல் பகுதியில் குண்டுகள் பாய்ந்த தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானர். துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும் அங்கு தூங்கிக் கொண்டிருந்த காவலர்கள் தப்பி வெளியே ஓடினர்.  தகவல் அறிந்து அங்கு வந்த உயர் அதி காரிகள் சுற்றித் திரிந்த நிலம்பார் சிங்காவை பிடித்து அவரிடம் இருந்து துப்பாக்கியை பறி முதல் செய்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு  வந்த டேங்க் பேக்டரி காவல் துறையினர் கிரி ஜேஷ் குமாரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத  பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து  நிலம்பார் சிங்காவை கைது செய்து அம்பத்  தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

;