tamilnadu

img

40 ஆண்டுகள் குடியிருப்பவர்களுக்கு மனைப்பட்டா வழங்குக

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

 தருமபுரி, மார்ச் 6- அரூர் அண்ணா நகர் பகுதியில் 40 ஆண்டுகள் குடியிருக்கும் மக் களுக்கு மனைப்பட்டா வழங்க வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  அரூர் அண்ணா நகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் கடந்த 40 ஆண்டு களாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலை விரி வாக்கம் என்ற பெயரில் அங்குள்ள குடியிருப்புகளை அகற்ற முயற்சிக் கப்பட்டு வருகிறது. எனவே அண்ணாநகர் மக்களுக்கு மாற்று இடமாக தொகுப்பு வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர  வேண்டுமென வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் ஒன்றியக்குழு உறுப்பினர்  ஈ.கே.முருகன் தலைமை வகித்தார்.   மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், ஒன்றிய செய லாளர் ஆர்.மல்லிகா, மாவட்ட குழு  உறுப்பினர்கள் பி.வி.மாது, சி. வேலாயுதம், ஒன்றியக்குழு உறுப் பினர்கள் எஸ்.கே.கோவிந்தன், கே.என்.ஏழுமலை, சி.பழனி, வி. ஆறுமுகம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் தங்கராசு  ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். நிறைவாக சார் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.