tamilnadu

img

மதுரை மாற்றுத்திறனாளி பெண் கோடீஸ்வரியில் ரூ.1 கோடி வென்றார்

சென்னை,ஜன.20- கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி நடத்திய  `கோடீஸ்வரி வினாடி வினா நிகழ்ச்சியில்  முதல் முறையாக மதுரையை சேர்ந்த  மாற்றுத்திறனாளி பெண் கவுசல்யா கார்த்திகா ரூ.1 கோடி பரிசை வென்றார். இந்த நிகழ்ச்சியை நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சி வரும் 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை அன்று இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. மதுரையைச் சேர்ந்த கவுசல்யா கார்த்திகா வாய் பேச முடியாதவர் ஆவார். மேலும் அவருக்கு கேட்கும் திறனும் இல்லை. அதிர்வுகள் மற்றும் மற்றவர்களின் வாய் அசைவு மூலம் மட்டுமே அவரால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும். அவரின் உறுதியும் தன்னம்பிக்கையும் அவருடைய கனவுகளை தொடரவும், வாழ்க்கையில் பல்வேறு தடைகளை தாண்டவும் உதவியது என்று ராதிகா சரத்குமார் கூறினார். கவுசல்யா கார்த்திகா  எம்.எஸ்சி தகவல் தொழில்நுட்பம் மற்றும் எம்பிஏ படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து  சாதனை படைத்துள்ளார். தற்போது அவர் மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் ஜூனியர் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். 1 கோடி ரூபாய் பணத்தில் ஒருபகுதியை படித்த நாகர்கோவிலில் உள்ள வாய் பேசமுடியாத, காது கேளாதோர் பள்ளிக்கு வழங்க உள்ளதாக கவுசல்யா தெரிவித்தார்.  வயாகாம் 18 நிறுவனத்தின் பிராந்திய பொழுதுபோக்கு பிரிவின் தலைவர் ரவிஷ் குமார் கூறுகையில் கவுசல்யாவின் வெற்றி இது போன்ற கனவுகளுடன் உள்ள பெண்க ளுக்கான உத்வேகத்தை அளித்து அவர்களின் கனவுகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்யும் என்றார்.

;