tamilnadu

img

புதிய குற்றவியல் சட்டங்கள்: ஒன்றிய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

புதிய குற்றவியல் சட்டங்களை எதிரான வழக்கில் ஜூலை 23-ஆம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மோடி அரசு, தனது கடந்த ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்யா ஆகிய புதிய சட்டங்களை எதிர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டு அவசர, அவரசமாக சட்ட அமைச்சருக்கு பதிலாக உள்துறை அமைச்சரே மசோதாவை சமர்ப்பித்து எவ்வித விவாதமின்றி ஜனநாயக விரோதமாக நிறைவேற்றிக் கொண்டது. 
மோடி அரசு அமல்படுத்திய 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டியுள்ளது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என வழக்கறிஞர் ராம்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக ஜூலை 23-ஆம் தேதிக்குள் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

;