சென்னை
தமிழகத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்ற லோக்அதாலத்தில் 4,468 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.83 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு ‘லோக் அதாலத்’ மூலம் தீர்வு காண 3 மாதத்துக்கு ஒருமுறைதேசிய அளவில் லோக் அதாலத் நடத்தப்படுகிறது.அதன்படி சனிக்கிழமையன்று தமிழகத்தில் உள்ளநீதிமன்றங்களில் லோக் அதாலத் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதியும், தமிழ்நாடு சட்டப்பணி கள் ஆணைக்குழு செயல் தலைவருமான வினீத்கோத் தாரி, லோக் அதாலத்தை தொடங்கி வைத்தார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காணொலி காட்சி மூலம்வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. மொத்தம் 4,468 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.83 கோடியே 6 லட்சத்து 71 ஆயிரம் இழப்பீடாக வழங்கப் பட்டது.