tamilnadu

img

ஜார்கண்ட் சிறுவனுக்கு கல்லீரல் மாற்று சிகிச்சை

அமைச்சர் கே.கே.சைலஜா ஏற்பாடு

திருவனந்தபுரம், டிச.27-  மஞ்சள் காமாலையைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் உள்ள 5 வயது ஜார்கண்ட் மாநில சிறு வனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தலையிட்டு தடைகளை நீக்கி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது சபீர் அன்சாரி என்பவர் கொச்சி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரு கிறார். இவரது மகன் சைனுல் அபிதீன் (5) மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு கோட்டயம் மருத்துவக் கல்லூரி யில் சிகிச்சை பெற்று வந்தார். கல்லீரல் செயல்பாடு முழுமை யாக நின்றுபோனதைத் தொடர்ந்து அமிர்தா மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். குழந்தையின் உயிரை பாதுகாக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்து வர்கள் தெரிவித்தனர்.  மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் தந்தையின் கல்லீரல் பொருந்துவது கண்டறியப்பட்டது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.10 லட்சம் உடனடியாக செலுத்து மாறு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.18 லட்சம் செலவாகும். அதற்கான வசதியில்லாத குடும்பம் பரிதவித்து நின்றது.  கொச்சி பல்கலை கழக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இது குறித்து சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜீவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அவர் உடனடியாக சுகா தாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சரை தொடர்பு கொண்டு சிறுவனின் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக்கொண் டார். அதைத்தொடர்ந்து அமைச்சரே நேரடியாக வியாழனன்று  அறுவை சிகிச்சை அளிப்பதற்கான உத்தரவு பிறப்பித்தார். 
 

;