tamilnadu

img

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுவரும் 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்டக்குழு சார்பில், ஆளுநருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம், சென்னை தலைமை தபால் நிலையம் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் எஸ்.மஞ்சுளா தலைமை தாங்கினார். செயலாளர் சரவணத்தமிழன், நீதிதேவன், பார்த்திபன், ஜூகைப், யூஜின் உட்பட பலர் அஞ்சல் அட்டையினை அனுப்பினர்.