“வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவரச சட்டம் 2020” மற்றும் “விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020” ஆகிய இரண்டு அவசர சட்டங்களையும் திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதனன்று (ஜூன் 10) நாடு தழுவிய நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.