tamilnadu

img

ஜனநாயகம் காப்பாற்றப்பட 2024 தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து வீழ்த்துவோம்

சென்னை, மே 29 - இந்தியாவின் ஜனநாயகம், அரசி யலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட 2024 தேர்தலில் பாஜகவை ஒன்றி ணைந்து அனைவரும் வீழ்த்துவோம் என விசிக விருதுவழங்கும் விழாவில் தலைவர்கள் சூளுரைத்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2023ஆம் ஆண்டிற்கான விருது கள் வழங்கும் விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஞாயிறன்று (மே 28) மாலை நடைபெற்றது. அக்கட்சி யின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமை தாங்கினார்.  இவ்விழாவில் அம்பேத்கர் சுடர் விருது சிபிஐ(எம்எல்) கட்சியின் பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா வுக்கும், பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செய லாளர் டி.ராஜாவுக்கும், காமராசர் கதிர் விருது சபாநாயகர் அப்பாவுக்கும், மார்க்ஸ் மாமணி விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணனுக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது தில்லி  முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபால் கவுதமுக்கும், காயிதே மில்லத் பிறை விருது முனைவர் மோகன் கோபா லுக்கும், செம்மொழி ஞாயிறு விருது  தமிழறிஞர் தாயம்மாள் அறவாண னுக்கும் வழங்கப்பட்டன. விருது பெற்ற சான்றோர்களுக்கு விருதுடன் ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டது.

மாற்றத்திற்கான போர்க்குரல்

விழாவில் சிபிஐ பொதுச் செய லாளர் டி.ராஜா பேசுகையில், “இந்தியா வை இடது பக்கம் திருப்புவது காலத்தின் தேவையாக இருக்கிறது என்பதை இந்த விழா உணர்த்துகிறது. இந்திய நாடு எந்த காலத்திலும் ஒரு மதம் சார்ந்த நாடாக மாறிவிடக்கூடாது என்று அம்பேத்கர் கூறினார். ஆனால்  இன்று மோடி ஆட்சிக் காலத்தில் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? மோடி அரசு கார்ப்பரேட் முதலாளி களுக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு அல்ல” என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். மைய அரசு அதிகாரங் களை குவித்து வைத்துக் கொள்ளக் கூடாது. இந்திய பொருளாதாரம் சிக்க லில் உள்ளது. இந்த நாடு மாற்றத்தை  எதிர்நோக்கி இருக்கிறது. மாற்றத்திற் கான போர்க் குரலை மக்கள் எழுப்ப  தொடங்கி விட்டனர். நாடு பாதுகாக்கப் பட வேண்டுமானால் பாசிச பாஜக அரசு தூக்கி எறியப்பட வேண்டும்.

பாஜக அரசு ஜனநாயகத்தையே தகர்த்து வருகிறது, இதனை முறியடித்து நாடு, அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டுமானால் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்த லில் பாஜக அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும். இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டுமானால் பாஜகவுடன் எந்தக் கட்சிக் கூட்டணி சேர்ந்தாலும் அவர்களையும் வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிய வேண்டும் எனவும் டி.ராஜா கேட்டுக் கொண்டார். சபாநாயகர் அப்பாவு பேசுகையில், ஓடிடி, இன்ஸ்டாகிராம் காலங்களில் வாழும் இளைய  தலைமுறையினருக்கு மறைந்த தலைவர்களை நினைவு கூறுவது நமது கடமை. அந்த வகை யில் தலைவர்களின் பெயரில் விசிக  விருது வழங்குவதுபெருமைக்குரியது, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக மட்டு மல்லாமல் எங்கு தவறு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் தலைவராக திருமாவளவன் இருக்கிறார் என்றார்.

விசிக தலைவர் தொல்.திருமாவள வன் பேசுகையில், புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோலை வைப்பதற் கான தேவை என்ன இருக்கிறது? அந்த  திறப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆதீனங்களை வரவழைத்து தேவாரம் பாடலைப் பாட வைப்பதற் கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.  “இந்திய தேசத்தை காப்பாற்ற பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்து டன் எதிர்க்கட்சியினர் ஒன்றிணைய வேண்டும். பாஜக சங்பரிவார் அமைப்புகள் அமைக்க நினைப்பது இந்து ராஷ்டிரம் என்னும் தேசியமே. இந்து ராஷ்டிரம் என்ப தன் பொருள் பிராமண தேசம் என்பதுதான். இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை கூடும் என்று அறிவித்திருக்கிறார் கள். மக்கள் தொகை அடிப்படையில் நாடா ளுமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை கூடி னால் அதை வரவேற்கலாம். ஆனால் பாஜக வினர் திட்டமிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கையை வட மாநிலங்களில் மட்டும் உயர்த்தி, அதன்பின் தேர்தல் வந்தால் மத அரசியலைத் தூண்டி தனக்கென தனி  மெஜாரிட்டியை பெற்று தொடர்ந்து ஆட்சி யில் இருக்கலாம் என்று சூழ்ச்சிகரமாக திட்ட மிட்டு இந்த அறிவிப்பை செய்திருக்கிறார் கள்” என்றும் அவர் சாடினார். இவ்விழாவில் விசிக பொதுச்செயலா ளர்கள் துரை.ரவிக்குமார் எம்.பி., சிந்த னைச் செல்வன் எம்எல்ஏ, திருப்போரூர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, நாகப் பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

;