tamilnadu

img

கோயம்பேடு மார்க்கெட் விரைவில் திறப்பு: விக்கிரமராஜா தகவல்

சென்னை:
கொரோனா தொற்று காரணமாக மூடப் பட்டுள்ள கோயம்பேடு வணிக வளாகத்தை மீண்டும் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். மேலும் காய்கறி, பூ, பழம் உள்ளிட்ட மார்க்கெட்டுகள் மற்றும் வாரச் சந்தைகளை கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விக்ரமராஜா, ‘தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில், கோயம் பேடு வணிக வளாகத்தை திறக்க கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக முதல் வர் தங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.துணை முதல்வரை  சந்திக்க முடியாத நிலையில், வரும் புதன் கிழமை அவரையும் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை அளிக்க உள்ளோம். அதன்பின் விரைவில் கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்படும் என்று நம்புகிறோம்.
அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே எந்த மார்க்கெட்டும் மூடாத பட்சத்தில், தமிழகத்தில் மட்டும் தான் மார்க்கெட் மூடப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் திறக்கும் பட்சத் தில் வியாபாரிகளுடைய முழு ஒத்துழைப்பை அளிப்போம்.மேலும் இ.பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையையும் வைத்துள்ளோம். அதுகுறித்தும் விரைவில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

;