tamilnadu

img

அனைத்து பணிமனைகளிலும் ஜன.30 போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாநிலை.... அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு....

சென்னை:
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை முறைப்படுத்தி நடத்தக் கோரி ஜன.30 அன்று அனைத்து பணிமனைகளிலும் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகிறது.

இது தொடர்பாக போக்குவரத்து கழகத்தில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த 5ந் தேதி கண்துடைப் பாக நடத்தப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதியை அறிவிக்குமாறு  கூட்டமைப்பு சார்பில் அந்த கூட்டத்தில் கோரப்பட்டது. ஆனால் தேதி அறிவிக்கப்படவில்லை.இதனையடுத்து 7ந் தேதி நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தையடுத்து, போக்குவரத்து துறை செயலாளர் கூட்டமைப்பு சங்கங்களுடன் பேசினார். அப்போது, சட்டமன்றம் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கி ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தையை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது. அதனை செயலாளர் ஏற்றுக் கொண்டார்.

அதன்பின் இரண்டு வார காலமாகியும் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை அரசும், நிர்வாகமும் துவங்கவில்லை. எனவே, உடனடியாக பேச்சுவார்த்தையை முறைப்படுத்தி நடத்தக்கோரி மகாத்மா காந்தி படுகொலை செய் யப்பட்ட கருப்புநாளாகிய ஜன.30அன்று அனைத்து பணிமனைகளிலும் உண்ணாநிலைப் போராட் டம் நடைபெறும். சென்னையில் மட்டும் பல்லவன் இல்லம் முன்பு மையப்படுத்தி நடைபெறும்.இதன்பிறகும், பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு தொழிலாளர்கள் தயாராக வேண்டும்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;