tamilnadu

வேலையின்மைக்கு இனியாவது தீர்வு காணுமா?

வேலையின்மை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக உள்ளது என்பதை அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் மோடியும் பா.ஜ.க.வினரும் இந்த பிரச்சனை குறித்து பேசுவதை கவனமாக தவிர்த்தனர். ஏனெனில் மோடி அரசாங்கத்தின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்று வேலையின்மை ஆகும். இந்த பிரச்சனை பின்னுக்கு தள்ளப்பட்டு போலி தேசியம், மத வெறி ஆகியவை தேர்தல் முடிவுகளை தீர்மானித்தன. எனினும் இப்பொழுது வேலையின்மைக்கு தீர்வு காண வேண்டிய இடத்தில் மோடி அரசாங்கம் உள்ளது.  ஒட்டு மொத்த விவ ரங்கள் மட்டுமல்ல, வேலையின்மையின் உட் கூறுகள் மிகவும் கவலை தருவதாக உள்ளன. குறிப் பாக நகர்ப்புறத்தில் வேலை யின்மை மிக கடுமையாக உள்ளது என்பதை தேசிய மாதிரி ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒட்டு மொத்த வேலையின்மை 6.1% எனில் நகர்ப்புறத்தில் இது 7.5%க்கும் கூடுதலாக உள்ளது. அதுவும் குறிப்பாக மகளிர் வேலையின்மை 10%ஐ தாண்டிவிட்டது.

பள்ளி மற்றும் கல்லூரி கல்வி பயின்றவர்களுக்கு வேலை என்பது குதிரை கொம்பாக உள்ளது. கிராமப்புற ஆண் களிடையே 10% மற்றும் கிரா மப்புற மகளிரிடையே 17% ஆக வேலையின்மை உள்ளது. நகர்ப்புறத்தில் இது கிட்டத் தட்ட 20%ஐ தொடுகிறது. இதே நிலைதான் 15 முதல் 29 வயது வரை உள்ள இளை ஞர்களுக்கும் வேலை என்பது குதிரை கொம்பாகவே உள்ளது. வேலையின்மை என்பது முற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் பழங்குடி இன மக்கள் என அனைத்து பகுதியினரையும் பாதித்துள் ளது. எனினும் தலித் மக்கள் தான் மிக அதிகமாக பாதிக் கப்பட்டுள்ளனர். அதே போல வேலையின்மையின் தாக்குதலிலிருந்து எந்த மதத்தை சார்ந்தவரும் தப்பவில்லை என்பதை கீழ்கண்ட விவரங்கள் தெரிவிக்கின்றன: வேலையின்மையின் கோர முகத்தை மறைத்து தேர்தலில் மோடி வெற்றி பெற்றாலும் வேலையில்லாத இளைஞர்கள் வெகு நாட்க ளுக்கு பொறுமையுடன் இருக்க மாட்டார்கள். இந்த பிரச்சனையை தீர்க்க உடனடியான உருப்படியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இளைஞர் களின் மிகப்பெரிய கோபத்தி ற்கு மோடி அரசாங்கம்ஆளாக நேரிடும். முதல் 5 ஆண்டுக ளில் வேலையின்மையை தீர்க்க மோடி அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இப்பொ ழுதாவது பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பது கேள்விக்குறியே!

விவரங்கள்: தேசிய மாதிரி ஆய்வகம்

 

                                 கிராமப்   நகர்ப்
                                     புறம்    புறம்

 

இந்துக்கள்             5.2%    7.6%
கிறித்துவர்கள்    7.4%    11.0%
முஸ்லிம்கள்         6.5%    8.5%
சீக்கியர்கள்           6.3%    9.1%