சென்னை, நவ. 16- டெல் சர்வதேச குழந்தைகள் திருவிழா சென்னையில் நடைபெறவுள்ளது. முதன்முறையாக பள்ளிகளில் திரையிடப்பட்டு கொண்டா டப்படும் ஒரு சர்வதேச திரைப்பட திருவிழா ஆகும். IFFK 2019 நிகழ்வானது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் 20லட்சத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தி னரை இலக்காக கொண்டு பள்ளிகளில் நடத்தப்படுகின்ற உலகின் மிகப்பெரிய திரைப்பட திருவிழாவாகும். குழந்தைகள் எதையும் பார்த்து கற்றுக்கொள்ளவே விரும்புகிறார்கள் என்ற உளவியலை அடிப்படையாகக் கொண்ட இது, பாடத்திட்டம் போல ஒருவிதமான படத்திட்டம். 30 நிமிட குறும்படங்கள் நூற்றுக்கும் மேல் இந்த மாணவர்க ளுக்கு காண்பிக்கப்பட இருக்கிறது. வேலம்மாள் கல்விக்குழு பள்ளி வளாகத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது. 40 நாடுகளில் இருந்து 35 மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களை இந்த திரைப்பட திருவிழா விற்காக தேர்வு செய்து திரையிட இருக்கிறார்கள். சுற்றுச்சூழலி லிருந்து மோதல்களுடனே குழந்தைப் பருவத்திலிருந்து விண்வெளி பயணம் வரை எண்ணற்ற பல அம்சங்கள் இந்த ஆண்டு பதிப்பில் இடம் பெற்றுள்ளன.. இந்த அம்சங்கள் அனைத்துமே கல்வியோடு பின்னிப்பிணைந்தவையாக இருக்கின்றன. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வேலம்மாள் பள்ளி களின் மூத்த முதல்வர் கோதண்டராமன்அகாடமிக் இயக்குனர் கீதாஞ்சலி சசிகுமார் மற்றும் டெல் நிர்வாக இயக்குனர் சையது சுல்தான் அகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.