tamilnadu

img

உழவர்கரை நகராட்சியில் சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

உழவர்கரை நகராட்சியில்  சிபிஎம் தெருமுனைப் பிரச்சாரம்

புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட உட்புற சாலைகளை சீரமைத்து தர வேண்டும். கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வாரி கொசுத்தொல்லை கட்டுப்படுத்த வேண்டும்.ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கும் கிருஷ்ணாநகர், சாமி பிள்ளை தோட்டம், எழில்  நகர், வெங்கட்டா நகர் ஆகிய பகுதிகளில் வாய்க்காலை  அகலப் படுத்தி செப்பனிட வேண்டும். ராஜீவ் காந்தி சிக்னல் புதிய மேம்பால திட்டத்தை விரைந்து செயல்  படுத்த வேண்டும். சாமி பிள்ளை தோட்டம் அணைக்  கரையில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மக்க ளின் அடிப்படை பிரச்சனை களை தீர்க்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரிய காலாப்பட்டில் துவங்கிய தெருமுனைப் பிரச்சாரத்தில் நகர செய லாளர் ஆர்.எம்.ராம்ஜி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பி னர் பிரபுராஜ், மாநிலக்குழு உறுப்பினர் சஞ்சைசேகரன், கமிட்டி உறுப்பினர்கள் அரி கிருஷ்ணன்,கிறிஸ்டோபர், நிலவழகன், ஜெயபிரகாஷ், சுரேஷ் உள்ளிட்ட கிளை செயலாளர்கள் உட்பட பலர் பிரச்சாரத்தில் பங்கேற்ற னர்.