tamilnadu

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஏற்பாடுகள் தீவிரம்....

சென்னை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக் கப்பட்ட பல பெற்றோர் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை தவிர்த்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்தனர். இதனால் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கடந்த ஆண்டு கூடுதலாக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் கொரோனா 2ஆம் அலை தமிழகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஏப்ரல் மாதத்தில் நடைபெற வேண்டிய மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது. பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தடைபட்டது.இந்த நிலையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கான நடைமுறைகளை பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. தலைமை ஆசிரியர்கள், ஊழியர்கள் 14 ஆம் 
தேதி பள்ளியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21ஆம் தேதியிலிருந்து பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் மாணவர்களை சேர்ப்பதற்கும், சத்துணவு சாப் பிடக்கூடிய மாணவர்களுக்கு அதற்கான உணவு பொருட்களை வழங்கவும், பள்ளிக்கு ஆசிரியர்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆண்டைபோல கூடுதலாக மாணவர் சேர்க்கை நடத்த கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துரைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

;