tamilnadu

img

தனவேலு எம்.எல்.ஏ.,வை தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தல்

புதுச்சேரி, ஜன. 30- புதுச்சேரி அரசை கலைப்பதற்கு செயல்  பட்ட  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனவேலு வின் எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் காங்கிரஸ் உறுப்பினர்கள் புகார் அளித்துள்ள னர். புதுச்சேரி காங்கிரஸ் அரசு மீதும், முதல்  வர், அமைச்சர்கள் மீதும் பல்வேறு குற்றச்  சாட்டுகளை அக்கட்சியின் பாகூர் தொகுதி எம்எல்ஏ தனவேலு அண்மையில்  புகார்  கூறியிருந்தார். மேலும் தனது ஆதரவாளர்க ளுடன் ஆளுநர் கிரண்பேடியை  சந்தித்து  புகாரும்  கூறியிருந்தார். இந்நிலையில் ஆட்சிக்கு எதிராகவும், எதிர்கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து  கொண்டு தான், முதல்வர் நாராயணசாமி,  அமைச்சர்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டு களை தனவேலு எம்எல்ஏ கூறிவருகிறார்.  ஆட்சியை தனவேலு,எம்எல்.ஏ., கலைக்க முயற்சிக்கிறார். எனவே அவரது எம்.எல்.ஏ  பதவியை பறிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவரும் அரசு கொறடா வுமான அனந்தராமன், காங்கிரஸ் கட்சித்  தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய மூர்த்தி, தீபாய்ந்தான், விஜயவேணி, ஜான்  குமார்  ஆகியோர் வியாழக்கிழமை (ஜன.30)  சட்டப் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து விடம் புகார் மனு அளித்தனர். புகார் மனுவை பெற்றுக் கொண்ட பேர வைத் தலைவர் சிவக்கொழுந்து உரிய  நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார். ஆளுங்காங்கிரஸ் கட்சிக்கு அருதி பெரும்பான்மை உள்ளதால் அரசுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறினார்.  காங்கிரஸ் கட்சியிலிருந்து தனவேலு தற்  காலிகமாக நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

;