tamilnadu

img

கொரோனா ஊரடங்கால் பாதிப்பு... மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக்கோரி முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பிய வாலிபர் சங்கம்

சென்னை:
கொரோனா வைரஸ் தொற்றி லிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களின் வாழ்வாதா ரத்தைப் பாதுகாக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆயிரக்கணக்கானோர் மின்னஞ்சல் அனுப்பினர். 

பரிசோதனையை அதிகப்படுத்துக!
கொரோனா தொற்றை கண்டறி வதற்கான பரிசோதனைகளை இன்னும் பலமடங்கு அதிகமான எண்ணிக்கையில், பலமடங்கு வேகத்தில் நடத்திட வேண்டும். அதிகமான எண்ணிக்கையில் ரேபிட் டெஸ்ட் நடத்துவதையும், அதற்கேற்ற வகையில் பரிசோதனை கருவிகளை கொள்முதல் செய்வதையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை யளிப்பதற்கான வசதிகளை போர்க்கால அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வெண்டிலேட்டர்கள், படுக்கைகள், கொரோனா பரிசோதனைக்கான கருவிகள், மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங் கள், மருந்துப் பொருட்கள் கூடுதலான எண்ணிக்கையில் இருப்புவைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். 

குடும்பத்திற்கு தலா ரூ.7500 வழங்கிடுக!
ஊரடங்கால் வருமானமிழந்து தவிக்கும்  மக்களுக்கு தமிழக அரசுஏற்கனவே அறிவித்த நிவாரணம் முழுமையான அளவு மக்களுக்குச் சென்றடையவில்லை. வருமானவரி கட்டாத ஒவ்வொருகுடும்பத்திற்கும் தலா ரூ.7500 வீதம்மூன்று மாதங்கள் வழங்கவேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லா வங்கிக்கடன், ஏற்கனவே வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம், மின்கட்டணங்களை தள்ளுபடி செய்வது என பொருளா தார உதவிக்கான திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-1 மற்றும் நிலை-2 பணியிடங்களை முழுமையாக, நிரந்தரமாக நிரப்பிட வேண்டும்.

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் சென்னை உள்ளிட்டு அனைத்துப் பகுதிகளிலும் தட்டுப்பாடின்றி, பாதுகாப்பான முறையில் குடிநீர் வினியோகம் செய்வதை  அரசு உறுதிப்படுத்தவேண்டும்.  தமிழகமக்கள் உணவுக்கே சிரமப்படும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வாலிபர்சங்கத்தினர் முதல்வருக்கு மின்னஞ்சல்களை அனுப்பினர்.மதுரையில் நடைபெற்ற இயக்கத்தில் வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநில துணைத்தலைவர் கோபிநாத்,  மாநிலத் தலைவர்  ரெஜிஸ்குமார்  குலசேகரத்திலும், மாநிலப் பொருளாளர் தீபா   சென்னையிலும், திண்டுக்கல்லில் மாநிலத்துணைச்செயலாளர் பாலச்சந்திர போஸ் உள்ளிட்டமாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் உட்பட வாலிபர் சங்கத்தினர் மின்னஞ்சல் அனுப்பும் இயக்கத்தில் பங்கேற்றனர்.
 

;