tamilnadu

இயலாமையை மறைக்க மக்கள் மீது குற்றச்சாட்டு

சென்னை, ஜூன் 19 - கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவ தில் தோல்வியடைந்துள்ள சென்னை மாநக ராட்சி, மக்கள் மீது குற்றம் சுமத்துகிறது. தொற்றை பரிசோதனையை குறைந்தளவே செய்துவிட்டு, தங்களது பாதிப்பை முறை யாக, முழுமையாக சொல்லாததால் பாதிப் பும், இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது என்று மக்கள் மீது  குற்றம் சுமத்துகிறது. சென்னையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியது வரு மாறு: சென்னையில் 2 லட்சத்து 10 லட்சம்  பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்  பட்டுள்ளது. அதில் 37 ஆயிரத்து 70 நபர்க ளுக்கு தொற்று கண்டறியப்பட்டது. 16 ஆயி ரத்து 882 நபர்கள் மருத்துவமனை, முகாம்கள்,  வீடுகளில் உள்ளார்கள். ஒரு லட்சம் வீடுகள்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும்  பணியில் 11 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். தொற்று அறிகுறிகள் இருந்தும் மக்கள் அதனை முறையாக தெரிவிக்கவில்லை. தற்  போதுள்ள காய்ச்சல் முகாம்களை அதிக ரிக்க உள்ளோம். ஒரு நாளைக்கு 500 முகாம்கள் வரை நடத்தப்படுகிறது. இந்த முகாம்கள் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கண்டறிந்து சிசிச்சை அளித்துள்ளோம். களப்பணியாளர்களிடம் காய்ச்சல் அறிகுறி இருந்தால் மக்கள் தெரி விக்க வேண்டும். மருத்துவமனை அல்லது முகாம்களில் இருந்து தப்பி ஓடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று உறுதி  செய்யப்பட்டால், அவரின் குடும்பத்தின ருக்கும் தொற்று உறுதி ஆனதாகவே கருதப்  பட்டு அவர்களுக்கும் பரிசோதனை செய்ய  நடவடிக்கை எடுக்கப்படும். களப்பணி யாளர்களுக்கு காய்ச்சல், உடல் வெப்ப அளவை அறிய தெர்மல் மீட்டர் கருவி வழங்  கப்படும். மேலும், பல்சாக்ஸி மீட்டர் என்ற  கருவி வழங்கப்படவுள்ளது. இதை வைத்து  ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவை துல்லிய மாக கண்டறிய முடியும். கொரோனா தடுப்பு  பணியில் ஈடுப்படுபவர்கள் நாளை முதல் அடையாள அட்டையை அணிந்து வர வேண்டும். 315 மாநகராட்சி ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார். அமைச்சர் அன்பழகனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் தொடர்பில் இருந்த  மற்ற அமைச்சர்களும் தனிமைப்படுத்தப் படுவார்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஆணையர், தொற்று ஏற்பட்டவருடன் இருந்தார்கள் என்பதற்காக தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவரோடு நெருங்கிய தொடர்பு இருந்ததா, 15 நிமிடம் உரையாடல் நடந்துள்ளதா என்பதை ஆராய்ந்துதான் தனிமைப்படுத்த முடியும் என்றார்.