இந்தியன் வங்கி வாடிக்கையாளர்கள் கடையில் பொருட்களை வாங்கும்போது வங்கியின் டெபிட் மற்றும் பிரிபெய்டு கார்டுகளை பயன்படுத்தி ரூ.100 முதல் ரூ.2ஆயிரம் வரை ரொக்கப்பணத்தையும் பெறமுடியும். பிஒஎஸ் என்று அழைக்கப்படும் இந்த சேவைக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் ஏதும் செலுத்தவேண்டாம். இந்த சேவையால் பொதுமக்கள் ரொக்கமாக பணத்தை எடுக்க ஏடிஎம் மையங்களை தேடி அலைய வேண்டியதில்லை. இந்த சேவையில் சேரும் வணிகர்களுக்கு வங்கி ஊக்கத்தொகையை அளிக்கிறது. இந்த சேவையின் துவக்கவிழா சென்னை தி.நகரில் உள்ள வசந்த் அன்ட் கோ நிறுவனத்தில் நடைபெற்றது.இதில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எச்.வசந்த் குமார், வங்கியின் நிர்வாக இயக்குநர் எம்.கே.பட்டாச்சார்யா, பொதுமேலாளர் கே.சுந்தரரெட்டி, டிஜிட்டல் பிரிவு பொதுமேலாளர் எஸ்.ரங்கராஜன்,சென்னை மண்டல மேலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.