tamilnadu

img

சங்பரிவாரங்களால் இந்தியாவுக்குத் தலைகுனிவு: விசிக

 சென்னை, ஏப்.30- சங்பரிவாரங்களால் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு தனது அணுகு முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியது.  இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சர்வதேச மத சுதந்திர சட்டம் என்று ஒரு சட்டம் அமெரிக் காவில் இருக்கிறது. அதன் அடிப்படையில் உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையி னர் எவ்வாறு நடத்தப்படு கின்றனர் என்பதை ஆராய்ந்து அது குறித்த அறிக்கையை அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் அறிக்கை சமர்ப்பிக்கிறது. இந்த ஆண்டு சமர்ப்பித் துள்ள அறிக்கையில் இந்தியாவை கவனிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் அது வைத்திருக் கிறது.

கடந்த சில ஆண்டுக ளாக இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர் கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்க ளையும், மத்தியில் ஆளும் பாஜக அரசு சட்ட ரீதியில் அவர்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கை களையும் அட்டவணைப் படுத்தியுள்ள அந்த ஆணையம், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் சிறுபான்மை யினருக்கு எதிராகப் பேசியவற்றையும் மேற்கோள் காட்டி இருக்கிறது.  அரசியல் ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் இந்தியாவுக்குப் பல்வேறு இடையூறுகளைக் கொண்டு வரக்கூடும். இந்த அறிக்கையின் அடிப்படை யில் அமெரிக்க அரசு பொருளாதார தடைகளைக் கூட இந்திய அரசுக்கு எதிராக விதிக்க வாய்ப் பிருக்கிறது. ஏற்கனவே கொரோனா நோய்த் தொற்று காரண மாக வீழ்ச்சியடைந்துள்ள நமது பொருளாதாரம் மேலும் கடுமையான நெருக்கடிக்குள்ளாகும்.  

பாஜக அரசு பொறுப்பேற்ற தற்கு பிறகு அரசு ஆதர வோடு சங்பரிவாரங்களின் வெறுப்பு பிரச்சாரமும் தாக்குதல்களும் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகின்றன. சங் பரிவாரங்களுடைய நடவடிக்கையால் பாதிக்கப் படுவது ஒட்டுமொத்த இந்திய மக்களும் தான். எனவே, இதை அவர்களு டைய தனிப்பட்ட பிரச்சினை என்று நாம் எண்ணிவிட முடியாது. மத்திய அரசு இனியும் இத்தகைய வெறுப்புப் பிரச்சார நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காமல் கும்பல் கொலைக்கு' எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பதற் காகவும் அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அந்த அறிக்கை யில் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.