கொரோனா பரவ லைத் தடுக்க மேற்கொள் ளப்பட்ட ஊரடங்கு உத்தர வால் இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரம் முடங்கியுள்ளது. அதே நேரத்தில், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. சென்னையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ரூ.3,087-க்கு விற்ற ஒரு கிராம் தங்கம்(22 காரட்) ஏப்.21 ஆம் தேதி ரூ.4,044-க்கு விற்கப்பட்டது. மார்ச் 23 ஆம் தேதி ரூ.3,244-க்கு விற்கப்பட்ட 24 காரட் தங்கம், ஏப்.21ஆம் தேதி ரூ.4,413-க்கு விற்கப்பட்டது.
ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டு இருந்தாலும், சுப நிகழ்வுகள் தள்ளிவைக்கப் பட்டாலும் ஆன்-லைன் வர்த்த கம் தொடர்வதால் தங்கத்தின் விலை உயர்வும் தொடர்கிறது. அதேநேரம், கடந்த ஒரு மாதமாக நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்ததால், அக்கடைகளில் இருப்பு வைக்கப் பட்டுள்ள ஆபரண நகைகளின் மதிப்பு தற்போது கிராம் ஒன்றுக்கு ரூ.1,169 உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை குறைவும் ஒரு காரணம். அதில் முதலீடு செய்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தற்போது ஆர்வம் காட்டுவ தாலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறு கின்றனர். இது குறித்து தங்க நகை கடை வியாபாரி ஒருவர் கூறுகையில், “பெரிய அளவில் தங்க வர்த்தகத்தில் ஈடுபடு வோருக்கு மட்டுமே இந்த விலை உயர்வு லாபத்தை தரும். ஊரடங்கால் மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து இருப்ப தால் தங்கநகை வியாபாரம் சீரடைய 6 மாதங்களுக்கு மேலாகும்” என்றார்.