சிதம்பரம், பிப். 7- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண் விரிவாக்கத் துறையின் கிரா மப்புற விரிவாக்கப் பணி சார்பில் சிதம்பரம் அருகே உள்ள சி. முட்லூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நம்மாழ்வார் நினைவு நூல்கோல் செயல்முறை விளக்கப் பண்ணை துவக்க விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை இணைப் பேராசிரியர் மற்றும் கிராமப் புற விரிவாக்கப் பணி பொறுப்பாளர் முனைவர் ராஜ்பிரவின் வரவேற்று பேசினார். பல்கலைக்கழக வேளாண் துறை முதல்வர் முனைவர் மணிவண்ணன் தலைமை தாங்கி பேசுகையில், “புதிய வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடு களில் காய்கறி தோட்டங்கள் அமைத்து அதி களவில் கீரைகள் உட்கொண்டு தற்போ தைய குழந்தைகள் மற்றும் பெண்களி டையே காணப்படும் ஊட்டச்சத்து பிரச்சனை களுக்கு உரிய தீர்வுகள் காண வேண்டும்” என்றார்.
சி.முட்லூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணிவாசகம் பேசுகை யில், “இயற்கை வேளாண் தொழில் நுட்பங்க ளின் முக்கியத்துவம் மற்றும் தங்கள் பள்ளி யில் இயற்கை வேளாண்மை வாயிலாக சாகுபடி செய்யப்படும்” என்றார். சி.முட்லூர் பாரத வங்கியின் மேலாளர் சசிரஞ்சன் குமார் பேசுகையில் விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக லாபம் பெறவேண்டும் என்றும் இதற்கு தேவைப்படும் கடன் உதவி சேவைகளை தங்கள் வங்கி வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். இதில் கிராமப்புற விரிவாக்கப் பணியின் சார்பில் அமைக்கப் பட்ட நம்மாழ்வார் நினைவு நூல்கோல் செயல்முறை விளக்கப் பண்ணை வேளாண் துறை முதல்வர் மணி வண்ணன் திறந்து வைத்தார். நூல்கோல் சாகுபடியை தங்கள் வீட்டுத் தோட்டங்களில் துவங்க நூல்கோல் விதைகள். சி.முட்லூர் அரசு பள்ளியில் படிக் கும் வேளாண் பிரிவு மாணவர்களுக்கு பள்ளி வேளாண் ஆசிரியை சாந்தி, சி.முட்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் வேதநாயகி பஞ்ச நாதன், மேல் அனுபவம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் தவமணி மருதப்பன் ஆகியோர் வழங்கினார். 50 விவசாயிகளின் மற்றும் சி முட்லூர் அரசு பள்ளி வேளாண் பாடப்பிரிவு பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன் னோடி விவசாயி கணேசன் நன்றி கூறினார்.