சென்னை, ஆக,31- வடச் சென்னை மக்களைத் தொகுதி திமுக எம்பி கலாநிதி வீராசாமி சனிக்கிழமையன்று (ஆக.31) திருவொற்றியூர் தொகுதி யில் ஆய்வு செய்தார். பிறகு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அண்ணாமலை ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர், அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், ‘திருவெற்றியூர் ரயில் நிலையத்தில், விரைவு ரயில்கள் நிற்கவும், இருபுற மும் ரயில்வே கவுண்டர் வைக்கைவும், இருபுறமும் உயர்மட்ட நடை பாதை அமைக்கவும், கொரு க்குப்பேட்டை சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க வும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ’ என்றார்.