tamilnadu

img

தமிழகத்தில் 96 சதவிகிதம் பேர் டெல்டா வகை தொற்றால் பாதிப்பு

சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் செலுத்துவதற்கான மெகா கொரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.எனவே, வாரம் ஒரு முறை இதுபோன்ற சிறப்பு முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி, இரண்டாவது கட்டமாக இன்று ஞாயிற்றுகிழமை தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 20 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக, 17 லட்சம் எண்ணிக்கையிலான கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமினை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 96 சதவிகிதம் பேர் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 6 வாரங்களில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தால் மூன்றாம் அலையை தடுக்கலாம்.தமிழகத்தில் இதுவரை 4.2 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

;