‘ராஜ்நாத் சிங் போன்ற நிதானமான அரசியல்வாதி பொய் பேசுவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. சொத்துக்களை பறித்து ஊடுருவல்காரர்களுக்கு காங்கிரஸ் தருமென, காங்கிரசின் தேர்தல் அறிக்கையின் எந்தப் பக்கத்தில் படித்தீர்கள்? ராஜ்நாத் சிங் கண்ணுக்கு தெரியாத மையில் பேய்கள் எழுதிய ஆவணத்தைப் படித்துக் கொண்டிருந்தாரா? இதுபோன்ற அப்பட்டமான பொய்களை கூறி பாதுகாப்பு அமைச்சர் தனது கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது’ என முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.