ஒசூரில் விமான நிலையம் அமைக்க டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தொழில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில், அதற்கான பணிகளை தொடங்கியது தமிழக அரசு.
ஓசூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியமான இடங்களை ஆலோசகர்கள் தேர்வு செய்து வழங்கலாம். விமான போக்குவரத்திற்கு உகந்த இடம், விமான நிலையம் அமைக்க அனைத்து வசதிகளும் கொண்ட இடங்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூரில் விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசு அனுமதி கொடுத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.