நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய ஹோமியோபதி மருந்து ஆர்சானிக் ஆல்பம் 30 சி வழங்கும் நிகழ்ச்சி வியாழனன்று (ஜூலை 16) சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வாளகத்தில் நடைபெற்றது. வட சென்னை மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வை மாநகரட்சி ஆணையர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, மருத்துவர் செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.