tamilnadu

மூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் விவகாரம்: மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, நவ. 14- மூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைக்கவேண்டும் என்ற விதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருநங்கைகள் மற்றும் திருநம்பி கள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைக்க வேண்டும் எனக் கோருவது சட்டவிரோதம் எனவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக டிசம்பர் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் வெளி யுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

;