tamilnadu

img

முன்ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு  நீதிமன்றத்திற்கு  அதிகாரம் கிடையாது உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,பிப்.23- முன்ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதி மன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள் ளது. ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீதரன் என்பவர் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி திரு வள்ளூர் மாவட்ட முதன்மை செசன்சு நீதி மன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதி, ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தை அணுக உத்தரவிட்டார். இதன்படி, ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதி மன்றமும் விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டது. இதையடுத்து அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில்  மனுத்தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ஊழல் வழக்கில் போலீ சார் என்னை தேடி வருகின்றனர். இதனால் முன்ஜாமீன் கேட்டு கீழ் நீதிமன்றங்களில்  மனு தாக்கல் செய்தால், அதை விசாரிக்க நீதிபதிகள் மறுக்கின்றனர். எனவே, என் முன்ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.  இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம். தண்டபாணி முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி அளித்த தீர்ப்பில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதி மன்றத்திற்கு  ஊழல் தடுப்பு தொடர்பான வழக்கு களை விசாரிப்பதற்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை விசா ரிக்கும் அதிகாரம்  சிறப்பு நீதிமன்றத்திற்கு  இல்லை. மனுதாரர் தனக்கு முன்ஜாமீன் கோரி திருவள்ளூர் மாவட்ட முதன்மை செசன்சு நீதி மன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை மாவட்ட முதன்மை நீதிபதி விசாரிக்க வேண்டும். மேலும், இந்த உத்தரவு குறித்து அனைத்து கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் உயர்நீதிமன்ற பதிவுத்துறை அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டார்.

;