tamilnadu

img

மூலிகை குடிநீர் ஆய்வு: தலைமைச் செயலாளர் தகவல்

 சென்னை, ஏப்.1- மூலிகை குடிநீர் மூலம் கொரோனாவை தடுக்க முடியுமா என ஆய்வு செய்து வருவதாக தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 45 நிமிடங்கள் நீடித்தது.  இதனைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள தேவையான மருத்துவ பொருட்கள் இருப்பில் உள்ளது" என்றார். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறி வெளியில் நடமாடினால், மருத்துவமனைகளில் தனிமை முகாம்களில் வைக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது என்றும் நாளொன்றுக்கு 2 கோடி மூன்றடுக்கு முக கவசங்கள் தயாரிக்கப் படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கபசுரக் குடிநீர் கொரோனவை கட்டுப்படுத்துவதில் பலன் தருமா என செய்தியாளர்கள் கேட்டபோது, ''அறிவியல் ரீதியாக தற்போதுவரை கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. கபசூரக்குடிநீர் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன,'' என்றார். ஆலோசனை கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவத்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். அதில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு குறித்தும், கொள்முதல் செய்ய உள்ள மருத்துவ உபகரணங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், புறநோயாளி ளுக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்கள் முககவசம் அணிய வேண்டும், மருத்துவமனைகளில் போதுமான அளவிற்கு கிருமி நாசினிகளை வழங்க வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்தும் தலைமை செயலாளர் வலியுறுத்தினார்.

;