tamilnadu

img

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:
தமிழகத்தில் 10 மாவட் டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது:-தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத் திற்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தேனி, பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின் னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத் திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடனும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும்.அடுத்த 24 மணி நேரத் திற்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் வடக்கு குஜராத் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

;