tamilnadu

உடற்பயிற்சியுடன் கூடிய நடனப்பயிற்சியால் உடலில் ஆரோக்கியமான மாற்றங்கள்!

உடற்பயிற்சியுடன் கூடிய நடனப்பயிற்சியால் உடலில் ஆரோக்கியமான மாற்றங்கள்!

சென்னை, ஏப்.28–  இந்தியாவில் இளம் பருவப் பெண்க ளின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை  முறை பழக்கங்களை மேம்படுத்து வதில், உடற்பயிற்சியுடன் கூடிய 10 நிமிட நடனப் பயிற்சியான தாண்டவ் மிக வும் பயனுள்ளதாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இளம் பருவத்தினருக்கு ஏற்றவாறு கலாச்சார ரீதியாக வடிவமைக்கப்பட்ட இந்த திட்டம், உடல் செயல்பாடுகள், இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டு மொத்த நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு உதவுகிறது. 1073 அடி நடத்தல், மற்றும் மிதமா னது முதல் தீவிரமானது வரை உடற் பயிற்சி 29 நிமிடங்கள் செய்யும்போதும் உடலில் 0.9 விழுக்காடு தசை உரு வாகிறது. அதே நேரம் உடல் எடையில் 0.7  கிலோ குறைவதோடு 2 விழுக்காடு கொழுப்பு குறைகிறது. ரத்த அழுத்தம் குறைவதும் அதிகமாக இருந்த இதய துடிப்பு குறைவதும் தெரியவந்துள்ளது. மன அழுத்தமும் குறைவதால் ஆரோக் கியமான பாதைக்கு திரும்ப முடி கிறது. இந்த ஆய்வு முடிவுகள் குறித்து  சென்னை கோபாலபுரம் டாக்டர் மோகன் நீரிழிவு சிறப்பு மையத்தின் நிர்வாக இயக்குநரும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் ஆர்.எம்.  அஞ்சனா கூறுகையில், "இந்த ஆய்வின்  முடிவுகள், தாண்டவ் போன்ற குறுகிய கால உடற்பயிற்சிகள் கூட இளம் பருவப் பெண்களின் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகின்றன. இந்தியா வில் குழந்தை பருவ உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் குறித்த கவலை கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த திட்டம் வளர்ந்து வரும் இந்த சுகா தார சவால்களை எதிர்த்துப் போராட ஒரு நம்பிக்கைக்குரிய தீர்வை வழங்கு கிறது." என்றார்.  அறக்கட்டளையின் மூத்த விஞ்ஞானி டாக்டர் ரஞ்சனி ஹரிஷ் மேலும் கூறுகையில், "தாண்டவ் சிறுமி களிடமிருந்து வந்த கருத்துகள் மிகவும் நேர்மறையானவை, பலர் ஆய்வு முடிந்த பிறகும் இந்த திட்டத்தைத் தொடர ஆர்வத்தை வெளிப்படுத்தி யுள்ளனர்." என்று கூறினார். சென்னையில் உள்ள இரண்டு பள்ளிகளில் 13–15 வயதுடைய 108 சிறுமிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.