திரையரங்கில் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா நோய் தொற்று காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து தளர்வுகளை அறிவித்துவருகின்றனர். இதனை தொடர்ந்து
தமிழகத்தில் திரையரங்குகள் வரும் நவம்பர் 10 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் திரையரங்கில் பின்பற்றப்பட வேண்டிய கட்டுப்பாட்டு வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அவை பின்வருமாறு:-
1. நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் திரையரங்குகளை திறக்க அனுமதி இல்லை.
2. திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவேண்டும்.
3. திரையரங்கு வளாகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம்.
4. திரையரங்கு மற்றும் அதன் வெளிப்பகுதியில் நிற்கும் பார்வையாளர்கள் சமூக இடைவெளி 6 அடியாக இருக்க வேண்டும்.
5. திரையரங்கினுள் குளிர்சாதன வசதி இருந்தால் அதன் வெப்பநிலை 24 டிகிரியிலிருந்து 30 டிகிரியாக இருக்க வேண்டும்.