tamilnadu

img

ஜூலையில் ஜிஎஸ்டி வரி ரூ.1.65 லட்சம் கோடி வசூல்!

 ஜூலை மாதத்தில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.1,65,105 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

2022-ஆம் ஆண்டு ஜூலை மாத வருவாயுடன் ஒப்பிடுகையில் 11 சதவீத அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி மாதாந்திர வருவாய் ரூ.1.6 லட்சம் கோடியைக் கடப்பது இது 5-வது முறையாகும். 

நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஜூலை மாத ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டது.

அதில் மத்திய சரக்கு சேவை வரி (சிஜிஎஸ்டி) ரூ.29,773 கோடியும், மாநில சரக்கு சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.37,623 கோயிடத, ஒருங்கிணைந்த சரக்கு சேவை வரி (ஐஜிஎஸ்டி) ரூ.85,930 கோடியும் வசூலாகியுள்ளதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

;