tamilnadu

img

தாத்தா ரெட்டை மலை சீனிவாசனுக்கு அச்சிறுப்பாக்கத்தில் மணிமண்டபம்

செங்கல்பட்டு, மார்ச் 13-  சமுக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய தாத்தா  ரெட்டைமலை சீனிவாச னுக்கு அச்சிறுப்பாக்கத்தில் அமையவிருக்கும் மணி மண்படத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக குரல்  கொடுத்த தாத்தா  ரெட்டை மலை சீனிவாசனை பெரு மைப்படுத்தும் விதமாக, அவர் பிறந்த இடமான மது ராந்தகம் அருகே உள்ள  கோழியாளம் கிராமத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு  தீண்டாமை ஒழிப்பு முன்  னணி, விடுதலை சிறுத்தை கள் கட்சி உள்ளிட்ட பல் வேறு சமுக அமைப்புகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ரெட்டை மலை சீனிவாசனுக்கு ரூ. 1  கோடி மதிப்பில் திருவுரு வச் சிலையுடன் கூடிய மணி மண்டபமும், அதிலேயே நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழக சட்டமன்ற 110 விதியின் கீழ்  அச்சிறுப் பாக்கத்தில்  கடந்த ஆண்டு  அறிவித்திருந்தார். இதற்  கான நிதியும், அச்சிறுப் பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில்  சுமார் ஒரு ஏக்கர் நிலமும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து செங்கல்  பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான்லூயிஸ் மணிமண்ட பத்திற்கான அடிக்கல்லை வெள்ளியன்று (மார்ச் 13)  நாட்டினார். இதில் கோட் டாட்சியர் லட்சுமிபிரியா, பொதுப்பணித்துறை மண் டல கண்காணிப்பாளர் ஆயி ரத்தரசு ராஜசேகர், செயற் பொறியாளர் அரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.