tamilnadu

img

ரூ.28 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்

சென்னை:
தங்கம் விலை சில நாட்களாக உயர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த மாதம் தங்கம் விலை ரூ.26 ஆயிரத்தை தாண்டியது. பிறகு, படிப்படியாக உயர்ந்து ரூ. 27 ஆயிரத்தை தொட்டது. தங்கம் பவுனுக்கு ரூ. 27,064-க்கு விற்பனை ஆனது. 3 ஆம் தேதி பவுனுக்கு ரூ. 264 அதிகரித்தது. ஞாயிறன்று விலையில் மாற்றம் இல்லை.இந்த நிலையில் திங்களன்று(ஆக.5) தங்கம் பவுனுக்கு ரூ. 352 அதிகரித்தது. ஒரு பவுன் ரூ. 27,680-க்கு விற்கிறது. கிராமிற்கு விலை ரூ.44 உயர்ந்து ரூ. 3,460 ஆக உள்ளது. இது தங்கம் விலையில் புதிய உச்சமாக உள்ளது. ரூ.28 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கி இருப்பது பெண்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 1300 உயர்ந்து 45 ஆயிரத்து 800 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 45.80 ஆக இருக்கிறது.

;