பழங்குடி இருளர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, தொகுப்பு வீடு மற்றும் ஜாதி சான்று கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று (ஜூன்2) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காவலன்கேட் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பெ.சண்முகம், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.செல்வம், சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.சங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.