சென்னை:
நாடு முழுவதும் ஜூலை 3 ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்க வேண்டும் என்று தமிழகத் தொழிலாளர்களுக்கு சிஐடியு தமிழ் மாநிலக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
சிஐடியு மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது.பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், பொருளாளர் மாலதிசிட்டிபாபு, உதவி பொதுச் செயலாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன், எஸ்.கண்ணன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.கொரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு வழங்குவது போல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஒப்பந்தம், தினக்கூலி, சுய உதவிக்குழு என்று பாகுபாடு பாராமல் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும்.கொரோனா ஊரடங்கு காலத்திலும் மின்சாரம், போக்குவரத்து, கூட்டுறவு, நுகர்பொருள், அங்கன்வாடி, டாஸ்மாக் போன்ற மாநில அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். மாநில பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடு வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.முறைசாரா தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக வழங்கிய கொரோனா நிவாரண உதவித் தொகை ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. இரண்டாவது கட்டமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்ட உதவித்தொகையும் முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது நிலுவையில் உள்ள உதவித் தொகைகளை திருப்பி அனுப்பும்படி மாவட்ட தொழிலாளர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. இத்தகைய நடவடிக்கையை கைவிட்டு விடுபட்டுள்ள தொழிலாளர் களை தொழிற்சங்கங்கள் மூலமாக கண்டறிந்து நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும்.
இது போன்று முடித்திருத்துவோர், கைத்தறி தொழிலாளர்க ளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரண உதவித்தொகையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும்.முறைசாரா தொழிலாளர்களுக்கு வழங்கியது போல் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதித்துள்ள ஓவியர்களுக்கும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும்.தொழில் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் கள் முறையாக பின்பற்றப்படு வதில்லை. இதனால் தொழிலாளர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். அரசு வழிகாட்டுதலை மீறும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.கொரோனா ஊரடங்கு காலத்திலும் சென்னை, மெட்ரோ ரயில்வே, காளீஸ்வரி ரிபைனரி ஆயில், திருவள்ளுர் மாவட்டம் இந்தியன் பர்னிச் சர், தருமபுரி மாவட்டம் இண்டிகிரா கிரானைட் உள்ளிட்ட நிறுவனங்களில் பணி நீக்கம், ஆட்குறைப்பு போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், தொழிலாளர் துறையும் உரிய முறையில் தலையிட்டு தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்.
கொரோனா ஊரடங்கினால் அனைத்து பகுதி மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து அத்தியவசிய பொருட்களை வாங்குவதற்குக்கூட வழியில்லாததை கருத்தில் கொள்ளாமல் மறைமுகமாக விலைவாசி உயர்வை ஏற்படுத்தும் வகையில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு கடந்த 10 தினங்களில் 5 ரூபாய் அளவிற்கு உயர்த்தியதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.கொரோனா ஊரடங்கு காலத் தில் மக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கவும், நோய் பரவலை தடுக்கவும், வாழ்வாதாரத்தை இழந்துள்ள உழைப்பாளி மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வதற்கான முனைப்பு காட்டுவதற்காக மாறாக இந்த பேரிடரை பயன்படுத்தி தொழிலாளர் நல சட்டங்களை திருத்தவும், வேலை நேரத்தை 12 மணி நேரமாக்கவும், வங்கி, காப்பீடு, ரயில்வே, பாதுகாப்பு தளவாட நிறுவனங்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கவும், பி.எப், வட்டித் தொகையை குறைக்கவும் போன்ற உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த வருவதை கண்டித்தும், வாழ்வாதாரத்தை இழந்துள்ள அனைத்து தொழிலாளருக்கும் மாதம் ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும், கொரோனா ஊரடங்கு காலத்திலும் பணிக்கு வரும் தொழிலாளர் அனைவருக்கும் ரூ.50 லட்சம் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 3 அன்று நாடு தழுவிய இயக்கத்திற்கு மத்திய தொழிற் சங்கம் விடுத்துள்ள அறைகூவல்படி தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஆலைவாயில் கள், தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் சிஐடியு சங்க உறுப்பினர்கள் பங்கேற்பது என்று முடிவு செய் யப்பட்டது.