பொதுத்துறை நிறுவனங்களை விற்பதையும், தொழிலாளர் விரோத கொள்கையை அமல் படுத்தி வரும் மத்திய பாஜக ஆட்சியை கண்டித்து நவம்பர் 28 ஆம் தேதி பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு புதுநகரில் வேலை நிறுத்தம் குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.நரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.