tamilnadu

img

காயத்திரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கம் 

நடிகை காயத்திரி ரகுராம் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நடிகை காயத்திரி ரகுராம் பாஜகவில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள் தன்னை தரக்குறைவாக விமர்சிப்பதாகவும் அவர்கள் மீது கட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

ஒரு பெண் என்றும் கூட பார்க்காமல் சொந்த கட்சியினரே சமூக வலைதளங்களில் தன்னை கடுமையாக விமர்சித்து வருவதாகவும், வெளிப்படையாக தெரிவித்தார். இந்நிலையில் புகாரளித்த காயத்திரி ரகுராமன் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். 

ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.