tamilnadu

img

விநாயகர் சதுர்த்திக்காக தளர்வு அளிக்க முடியாது... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை:
விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக தளர்வு அளிக்க முடியாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சனிக்கிழமையன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு  புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, விநாயகர் சிலை ஊர்வலத்துக்கும், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விநாயகர் சிலை வழிபாடு மற்றும் ஊர்வலங்களுக்கு அரசு விதித்த தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வெள்ளியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது,  விநாயகர் சதுர்த்திக்காக தளர்வுகள் அளிக்க இயலாது என தமிழக அரசு கூறியதை ஏற்று உயர்நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில், சென்னையில் மெரீனா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கலாம். தமிழகத்தில் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை தனி நபர்கள் நீர்நிலைகளில் கரைக்கலாம். பொது இடங்களில் சிலைகள் வைக்கவும் ஊர்வலம் செல்லவும் அரசு விதித்த தடை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளது.ஊர்வலம் நடத்தப்படாது என்றும்  முழு ஒத்துழைப்பு வழங்கவும் தயார் என இந்து முன்னணி, தமிழ்நாடு சிவசேனா கட்சி உத்தரவாதம் அளித்துள்ளன.

;