கிருஷ்ணகிரி, ஆக. 2- ஒசூர் பி.எம்.டெக்.கல்வி நிறுவனமும், கோவை அரவிந்த் கண் மருத்துவமனையும், கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கமும் இணைந்து இலவச கண் சிசிச்சை முகாம் பாகலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் பெரு மாள் தலைமையில் நடைபெற்றது. முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 80 பேர் இலவச அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அறங்காவலர் பெ.மலர், பள்ளி தலைமை ஆசிரியர் திம்மராயன், செய லாளர் பெ.குமார், இயக்குநர் சுதாகரன், பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சித்ரா, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம், பள்ளி உதவித் தலைமை ஆசிரியை ஐமுனாவதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டணர்.