சென்னை,நவ. 5- விளையாட்டு போட்டிகளின் போது பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக திட்டம் வகுக்க வேண்டும் என்று தமி ழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறி வுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஒத்திக்காடு ஏரியில் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக பந்து பட்டு லோகநாதன் என்ற இளைஞர் உயி ரிழந்தார். அவரது தந்தை தாமோ தரன் அளித்த புகாரின் பேரில் கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த ராசு மற்றும் அய்யப்பன் ஆகியோருக்கு எதிராக புல்லரம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராசு மற்றும் அய்யப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு நடைபெற்றது. அப்போது உயிரி ழந்த இளைஞர் லோகநாதனின் தந்தை தாமோதரன் நேரில் ஆஜராகி வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “கிரிக்கெட் பந்து பட்டு உயிரிழந்த லோகநாதன் தாமாக முன்வந்து விளையாட்டில் பங்கெடுத் திருக்கிறார். கார்க் பந்துபலமாக தாக்கியதில் அவர் உயிரிழந்துள் ளார். கிரிக்கெட் விளையாட்டில் கார்க் பந்து பயன்படுத்த எந்த தடையும் இல்லை. கிரிக்கெட் பேட்ஸ்மேன் களுக்கோ அல்லது அந்தப் போட்டி யை நடத்திய ஏற்பாட்டாளர் களுக்கோ லோகநாதனுக்கு உயி ரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் கிடையாது. எனவே மனுதாரர்களான ராசு மற்றும் அய்யப்பன் ஆகியோருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படு கிறது.
மேலும் ஒரே மகனான லோகநாத னின் உயிரிழப்பு என்பது அவர்களது பெற்றோருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. எனவே லோகநாதனின் மர ணத்துக்கு சட்ட ரீதியாக உரிய இழப்பீடு பெற்றுத்தர திருவள்ளூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டு போட்டிகளின்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் மர ணம் போன்ற அசம்பாவிதங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் தமி ழக அரசு திட்டம் வகுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.