tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

செய்யூர் அரசு பொது மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான  

சான்றிதழ் வழங்க கோரிக்கை  இலத்தூர், ஜூன் 30- செய்யூர் வட்டார அரசு பொது மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் லத்தூர் ஒன்றிய 3வது மாநாடு செய்யூரில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் இ.கோபிராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய துணை தலைவர் கே.மோகன் வரவேற்றார். வேலை அறிக்கையை ஒன்றிய செயலாளர் எஸ்.சதீஷ் சமர்பித்தார். சித்தாமூர் ஒன்றிய செயலாளர் ஏழுமலை, மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் லோகநாயகி ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு, வீட்டுமனை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகளின் மாதாந்திர உதவித்தொகை ரூ.6000-ம். 10,000-ம், ரூ.15,000-ம் வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட தலைவர் எம்.வெள்ளிக்கண்ணன் மாநாட்டில் நிறைவுரையாற்றினார்.   நிர்வாகிகள் தேர்வு இலத்தூர் கிழக்கு ஒன்றிய தலைவராக மோகன், செயலாளராக சதீஷ் , பொருளாளராக ஜெய் கிருஷ்ணன், லத்தூர் மேற்கு ஒன்றிய தலைவராக கோபிராஜன், செயலாளராக குமார், பொருளாளராக முகமது இலியாஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். உதவித்தொகை உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் மாற்றுத்திறனாளிகள் மாநாடு வலியுறுத்தல் சென்னை, ஜூன் 30- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஆர்.கே.நகர் 2ஆவது பகுதி மாநாடு தலைவர் மகாதேவன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் பி.எஸ்.பாரதி அண்ணா மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் தில்ஷாத்பேகம் வேலை அறிக்கையையும், பொருளாளர் ஜோதி ராமலிங்கம் வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். பாக்கியம், 41ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பா.விமலா, நிர்வாகிகள் செல்வகுமாரி, ராஜி, பிரேமா, மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். முன்னதாக தேசப்பன் வரவேற்றார். பாலாஜி நன்றி கூறினார். தீர்மானங்கள்  வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு பதிவு செய்து ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும், பகுதி வாரியாக மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர சிறப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும், முறையாக அளவீடு செய்து உரிய மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிர்வாகிகள் தேர்வு தலைவராக ஜோதி ராமலிங்கம், செயலாளராக தில்ஷாத் பேகம், பொருளாளராக பாலாஜி உள்ளிட்ட 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பகுதி வாரியாக சிறப்பு கூட்டங்கள்  மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை அம்பத்தூர், ஜூன் 30- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் அம்பத்தூர் பகுதி 2ஆவது மாநாடு தலைவர் ஏ.தண்டபாணி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ஏ.அருள் சங்கக் கொடியை ஏற்றினார். ஏ.ஷகிலா அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ஆர்.நடராஜன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ஜெ.ரவி வேலை அறிக்கையையும், பொருளாளர் எஸ்.பாலுமணி வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்ட துணைச்செயலாளர் எம்.பிரேமா, மாவட்டக்குழு உறுப்பினர் வி.ஜெயந்தி, சி.சுந்தரராஜ்,  மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். முன்னதாக துணைத் தலைவர் ஆர்.கமலக்கண்ணன் வரவேற்றார். ஏ.பேபி நன்றி கூறினார். தீர்மானங்கள் விண்ணப்பிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவி தொகை வழங்க வேண்டும்,  பகுதி வாரியாக மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர சிறப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும், முறையாக அளவீடு செய்து உரிய மருத்துவ சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  நிர்வாகிகள் தேர்வு தலைவராக ஏ.தண்டபாணி, செயலாளராக ஜெ.ரவி, பொருளாளராக வி.கிருஷ்ணசாமி உள்ளிட்ட 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தோழர் டி.சாந்தலிங்கம் காலமானார் அம்பத்தூர், ஜூன் 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் டி.சாந்தலிங்கம் (80) உடல்நலக் குறைவால் ஞாயிறன்று (ஜூன் 29) காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் மா.பூபாலன், சி.சுந்தராராஜ், எம்.ராபர்ட்ராஜ், குணசேகரன், ஆர்.ராஜன், சடையன், ராமமூர்த்தி, தையல் சங்க மாவட்ட செயலாளர் குணசேகர், பேச்சியம்மாள் (மாதர் சங்கம்), வேலாயுதம், ஊர்காளன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் திங்களன்று (ஜூன் 30) ஆவடி யில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட்டது. தங்கம் சவரனுக்கு ரூ.12

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை

திருவள்ளூர், ஜூன் 30- கும்மிடிப்பூண்டி, சிப்காட் வளாகத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலை யத்தில் மாணவர் சேர்க்கைக்காக இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.  இங்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எஸ்சி, எஸ்டி பிரிவில் சர்வேயர், மெஷினிஸ்ட், ரெப்ரிஜிரேட்டர், ஏசி டெக்னீஷியன் மற்றும் இன்பிளான்ட் லாஜிஸ்டிக் அஸிஸ்டணட் போன்ற தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்று உடனடி வேலை வாய்ப்பு பெறலாம். இங்கு பயிலும் பயிற்சியாளர்களுக்கு ரூ.750 மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும். மேலும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் மாதந்தோறும் ரூ.1000 மாதாந்திர உதவித்தொகையும், அரசு வழங்கும் பல சலுகைகளும் உள்ளன. எனவே உடனடியாக நேரடி சேர்க்கைக்கு க.ராஜலஷ்மி, முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சிப்காட் வளாகம், கும்மிடிப்பூண்டி என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் 8248738413, 7904159767, 9444923288, 9940258464 ஆகிய செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

200 அடி தள்ளி நின்ற ரயில்

சென்னை, ஜூன் 30- புதுச்சேரியில் இருந்து எழும்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் திரிசூலம் ரயில் நிலை யத்தில் நிற்காமல் 200 அடி தள்ளி நின்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ரயில் நிற்காமல் சென்ற தால் பயணிகள் கூச்சல் எழுப்பி னர். இதனை அடுத்து சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் 200 அடி தள்ளி ரயிலை நிறுத்தினார். ரயில் நிற்காமல் சென்றது குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. மாநகராட்சி பள்ளிகளில்  கேமரா பொருத்த நடவடிக்கை சென்னை, ஜூன் 30- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் முழுமையாக சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ரூ.6.50 கோடியில் 245 பள்ளிகளில் சிசிடிவி பொருந்த ஏற்கெனவே டெண்டர் விடப்பட்டுள்ள தாக மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். ரூ.6.60 லட்சம் கஞ்சா பறிமுதல் அம்பத்தூர், ஜூன் 30- பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ஞாயிறன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீ சார் அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அம்பத்தூர், ஞான மூர்த்தி நகர் நேதாஜி தெருவைச் சேர்ந்த சீனு(23) என்பதும், ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தியதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, போலீசார், சீனுவை கைது செய்தனர். ரூ.6.60 லட்சம் மதிப்பிலான 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர், சீனுவை புழல் சிறையில் அடைத்தனர்.

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

தாம்பரம், ஜூன் 30- தாம்பரம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி  பலி யானான். தாம்பரம் அடுத்த பெருங்களத்துார், புத்தர் நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் – நாகலட்சுமி தம்பதி யின். இவர்களது மகன் ஹரிஹரன்(14). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிறு ஹரிஹரன் அவரது நண்பர்  பள் 4 பேருடன் முடிச்சூர், லிங்கம் நகர் பகுதியில் உள்ள முடிச்சூர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீச்சல் தெரியாத ஹரிஹரன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமானார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து நண்பர்கள் அலறிக் கூச்சலிட்டனர். பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஏரியில் மூழ்கிய ஹரிஹரனை சடலமாக மீட்டனர். அதனைத்தொடர்ந்து, போலீசார் சிறு வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.