tamilnadu

சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்படுத்தப்பட்ட டேலி மென்பொருள்

சென்னை, மார்ச் 7 சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறு வர்த்தர்களுக்கான மேம்படுத்தப்பட்ட ரிலீஸ் 6.6 என்ற மென்பொருளை  முன்னணி வணிக மேலாண்மை மென்பொருள் வழங்கு நரான டேலி சொல்யூஷன்ஸ் நிறுவனம் சென்னையில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இனி  வாடிக்கையாளர்களின் கணினிகளில் தரவை வைத்திருக்கும் அதே வேளையில், உலகின் எந்த ஒரு இடத்தில் இருந்தும் எந்நேரமும் ஸ்மார்ட்போன், டேப்லெட் போன்ற எந்தவொரு சாதனத்தின் மூலமாகவும் பாதுகாப்பாகவும் தனிப்பட்ட முறையிலும் வணிகங்கள் முக்கியமான வணிகத் தரவை அணுக முடியும் என்று  டேலி சொல்யூஷன்ஸின் தென் மண்டல பொது மேலாளர்  புவன் ரஞ்சன் கூறினார். தயாரிப்பு பற்றி விரிவாக பேசிய  அவர், பெரும்பாலான நிதி பயன்பாடுகளில் முக்கியமான மற்றும் தனிப்பட்ட தகவல்கள் உள்ளன. அவை வணிக தொடர்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் அணுகப்பட வேண்டும். உலகம் மேலும் மேலும் கிளவுட்டை நோக்கி நகரும் பொழுது எந்தவொரு தரவு மீறலும் வணிகங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் இந்த பயன்பாடுகள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.