தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
சென்னை, நவ.1- வருகிற 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படு கிறது. அன்றைய தினம் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப் படுத்துவார்கள். ஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அதிக அளவில் ஏற்படுவதாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்தது. மேலும் பசுமை பட்டாசுகள் தயாரிக்கவும், வெடிக்கவும் உத்தர விட்டது.
அதனடிப்படையில், தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டும் இரண்டு மணி நேரம் தான் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!
சென்னை, நவ.1- வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.101.50 புதன் கிழமை (நவ.1) உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1,898-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன் பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தற்போது ரூ.1,999.50-க்கு விற்பனையாகிறது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வரு கின்றன. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான புதனன்று (நவ.1) வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.
அதன்படி ரூ.101.50 உயர்த்தப் பட்டுள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு உருளை ரூ.1,999.50-ஆக விற்பனை செய்யப் படுகிறது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனையா கிறது.
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களில் ரூ.300-க்கு மேல் சிலிண்டர் விலை உயர்த்தப் பட்டுள்ளதால், உணவகங்களின் விலை உயர்வு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
முருகன் கோயில்களுக்கான சுற்றுலா முன்பதிவு தொடக்கம்
சென்னை, நவ.1- தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் முருகன் கோயில் களுக்கான சுற்றுலா முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. சென்னை வாலாஜா சாலை சுற்றுலா வளாகத்தி லிருந்து காலை 7 மணிக்கு புறப்படும் பேருந்து மாலை வந்தடையும். சுற்றுலா வில் வல்லக்கோட்டை, குன்றத்தூர், திருப்போரூர், திருவான்மியூர் முருகன் கோயில்களில் தரிசனம் செய்யப்படும். மேலும் விவரங்களை 180042531111, 044-25333333, 044-25333444 (or) www.ttdconline.com தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.