tamilnadu

img

தடங்கம் குப்பை கிடங்கில் தீ விபத்து -புகையால் பொதுமக்கள் அவதி

தருமபுரி, ஜூன் 26- தருமபுரி நகராட்சிக்கு சொந்தமான குப்பைகிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் ஏற்பட்டு பொதுமக்கள் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம்,  தடங்கம் ஊராட்சியில் 12 க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இவ் ஊராட்சியில் சுமார் 5,500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தடங் கம் கிராமத்தைச்சுற்றி 3 தனி யார் நுாற்பாலைகள், 4 கலைக் கல்லுாரிகள், 4 பள்ளிகளும் உள் ளன. தடங்கம் கிராமத்தின் அரு காமையில் கடந்த 10 ஆண்டு களுக்கு முன் சுமார் 11 ஏக்கர் பரப் பளவில் குப்பை கிடங்கு  தருமபுரி நகராட்சி நிர்வாகம் அமைத்தது. நகராட்சி நிர்வாகம் குப்பை கிடங்கில் மக்கும் குப்பை, மக் காத குப்பை என பிரித்து உரம் தயாரிக்கப்படும் எனவும் குப்பை யால் எந்த சுகாதார சீர்கேடு  ஏற்படாது என பொதுமக்களுக்கு  வாக்குறுதி அளித்தது. ஆனால், இங்கு கொட்டப் படும் குப்பைகளை உரம் தயாரிக் கும் நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் செய்யவில்லை. கடந்த 10 ஆண்டுளுக்கும் மேலாக கொட் டப்படும் குப்பைகள் மலை போல் காட்சி அளிக்கிறது. மேலும், மேடான பகுதியில் குப்பை கிடங்கு   உள்ளதால் குப்பை  மக்கி  மழைகாலங்களில் குப்பை கழிவுநீர்  சுற்றியுள்ள 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் புகுவ தால் விவசாயத்தில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி பயிர்கள் நோய் பாதிப்புக்குள்ளாகின்றது. இதனால் மகசூல் குறைவாக வருகிறது. மேலும் நிலத்தடி நீரில் மாசு ஏற்பட்டு குடிநீருக்கு உதவாத நீராக மாறிவருகிறது. மேலும், குப்பை கிடங்கில் அடிக்கடி குப்பைகளை தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால் முதியோர்கள், குழந்தைகள் சுவாசநோய் பாதிக்குள்ளாகின்ற னர். மேலும் தடங்கம் ஊராட்சி முழுவதும் கொசு, ஈ தொல்லை அதிகமாக பரவிவருகிறது.

இத னால் பொதுமக்கள் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளா கின்றனர். அப்பகுதி கிராமமே சுகாதரசீர்கேட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குப்பை கிடங்கின் தாழ் வான பகுதியில் அமைந்துள்ள இருளர் காலனி மக்கள் வைரஸ் காய்ச்சலால் தொடர்ந்து பாதிக் கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதனன்று காலையில் இருந்து குப்பை எரிந்து வருகிறது. இதனால் அதன் சுற்று வட்டார பகுதியை புகை மண்டலாமாக உள்ளது .பொதுமக்களும் குழந்தைகளும் மூச்சுவிட சிரமப்பட்டு வருகின் றனர். பொதுமக்கள் அளித்த புகா ரின் அடிப்படையில் தீயனைப்புத் துறையினர் தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின் றனர். இதுகுறித்து விவசாய தொழி லாளர் சங்க ஒன்றிய தலைவர் அண்ணாதுரை கூறுகையில், நகராட்சி குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடத்தினோம். அப்போது கோட் டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் சில மாதம் கழித்து குப்பை கிடங்கை அகற்று வதாக எழுத்துபூர்வமாக உறுதிய ளித்தார். ஆனால் தொடர்ந்து குப்பைகிடங்கில் தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தார்.