tamilnadu

img

காலிப்பணியிடங்களை நிரப்புக.... காலமுறை ஊதியம் வழங்குக... சத்துணவு ஊழியர்கள் முறையீடு போராட்டம்.....

சென்னை:
காலமுறை ஊதியம் கேட்டு பிப்ரவரி 10 புதனன்று சென்னை சேப்பாக்கத்தில் சத்துணவு ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 9 ஆயிரம் ரூபாயும், பணிக்கொடையாக 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும். பள்ளிசத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.மாநிலத் தலைவர் ப.சுந்தரம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் வாசுகி தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.நூர்ஜகான் பேசினார்.போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்க பொதுச் செயலாளர் டி.டெய்சி உள்ளிட்டு தோழமை சங்கத் தலைவர்களும், சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பே.பேயத்தேவன், துணைத்தலைவர்கள் கே.அண்ணாதுரை, பா.பாண்டி, ஜி.சாவித்திரி, ஆ.அமுதா, ஜெ.
சசிகலா, மாநிலச் செயலாளர் ஆ.பெரியசாமி, கு.சத்தி, ஏ.மலர்விழி, கே.சுபந்தி, ஆர்.எம்.மஞ்சுளா உள்ளிட்டோரும் பேசினர்.

பேச்சுவார்த்தை
இதனிடையே சமூக நலத்துறை செயலாளர் எஸ்.மதுமதி ,சங்கத் தலைவர்களை அழைத்து தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

;