வேலூர், ஜூலை 13- விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆற்காடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஸ்டீபன் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில். பிரதமரின் விவசாயிகளுக்கான உதவித் தொகை திட்டத்தின்கீழ் ஆற்காடு வட்டாரத்தில் இது வரை பதிவு செய்யாமல் விடுபட்ட சிறு, குறு உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் இப்போது பதிவு செய்யலாம். பட்டா மாற்றம் செய்யப்படாமல் அப்பா, தாத்தா பெய ரில் பட்டா நிலம் உள்ளவர்களும் முறையான ஆவணங்களு டன் கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பித்து, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் நிலம் வைத்துள்ள அரசு ஊழியர்கள், வருமான வரி கட்டுபவர்கள், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறு பவர்கள் உள்ளிட்டோர் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. எனவே விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க விவரம், பட்டா எண் அல்லது நில உடைமை ஆவணம், செல்போன் எண் ஆகிய விவரங்களுடன், கிராம நிர்வாக அலுவலரை அணுகிப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் உதவிக்கு வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.