tamilnadu

img

தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

சென்னை:
தமிழகத்தில் பொதுமுடக்கம் ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

 நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதற்கு முன் கடைசியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வெள்ளிக்கிழமையன்றுடன் (ஜூலை 31) முடிவடைவதாக இருந்தது.கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.இந்நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஆக.31 இரவு 12 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது. திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.  இறப்பு, இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம்.

பொது இடங்கள், பணியிடங்களில், பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்; பொது இடங்களில் மது அருந்தவும், குட்கா பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;